< Back
தேசிய செய்திகள்
கொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு:  எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு: எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி

தினத்தந்தி
|
9 April 2024 7:44 PM IST

கொரோனாவுக்கு பின், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து அது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலை உள்ளது என எய்ம்ஸ் டாக்டர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பெருந்தொற்றுகளால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷில்பா சர்மா கூறும்போது, கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின், நோயெதிர்ப்பு சக்தி மக்களிடையே குறைந்து காணப்படுகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள மக்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போன நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதனால், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து உள்ளது. இது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையும் உள்ளது என கூறியுள்ளார்.

குடல்வால் அழற்சி, பித்தப்பை அழற்சி, அழற்சி நிலைமைகள் போன்றவை அதிகரித்து உள்ளது. இதனால், தோல் அரிப்புகள் போன்ற பல ஒவ்வாமைகளும் ஏற்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார். நீரிழப்பால், உறைதல் ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்படும் செய்திகளை கேட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

மேலும் செய்திகள்