< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு நீதி கிடைக்கும்" - பா.ஜனதா எம்.பி. மேனகா காந்தி உறுதி
|2 Jun 2023 3:19 AM IST
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு நீதி கிடைக்கும் என்று பா.ஜனதா எம்.பி. மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் தெரிவித்து அவரை கைது செய்யக்கோரி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள், கடந்த செவ்வாய்க்கிழமை தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அறிவித்து போராடினர். இதையடுத்து அவர்களின் போராட்டம் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி., மேனகா காந்தி, நேற்று 'மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வெற்றி பெறும், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படுவார்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விலங்குகள் மீதான ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் 'இணைந்து வாழ்வோம்' விழாவில் பங்கெடுப்பதற்காக ஸ்ரீநகர் வந்த அவர் செய்தியாளர்களிடம் இந்த கருத்தை தெரிவித்தார்.