கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் குழந்தையை போலீசில் ஒப்படைத்து நாடகமாடிய வாலிபர்
|கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் குழந்தையை ஆதரவற்ற குழந்தை என கூறி போலீசில் ஒப்படைத்து வாலிபர் நாடகமாடினார். இந்த குட்டு அம்பலமானதால் வாலிபரையும், கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர்.
மைசூரு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் குழந்தையை ஆதரவற்ற குழந்தை என கூறி போலீசில் ஒப்படைத்து வாலிபர் நாடகமாடினார். இந்த குட்டு அம்பலமானதால் வாலிபரையும், கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசில் ஒப்படைத்தார்
மைசூரு மாவட்டம் லஷ்கர் மொகல்லா பகுதியை சேர்ந்தவர் ரகு(வயது 30). திருமணமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி லஷ்கர் மொகல்லா போலீஸ் நிலையத்திற்கு ஆண் குழந்தையை தூக்கி கொண்டு ரகு சென்றார். அங்கு அவர், போலீசாரிடம் குழந்தையை ராய்ச்சூர் பஸ் நிலையத்தில் அவரது தாய் தன்னிடம் விட்டு சென்றதாகவும், அதன் பின்னர் அவரது தாய் வரவில்லை என கூறி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து குழந்தையை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாருக்கு ராய்ச்சூரில் ஒரு குழந்தை மாயமானதாக தகவல் கிடைத்தது. அந்த குழந்தையின் முகத்தோற்றம் லஷ்கர் மொகல்லாவில் காப்பகத்தில் உள்ள குழந்தையின் முகத்தோற்றத்துடன் ஒத்துபோனது. இதையடுத்து காணாமல் போனதாக தேடப்பட்ட குழந்தையின் தந்தையை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
கள்ளக்காதலியின் குழந்தை
அதாவது குழந்தையை போலீசிடம் ஒப்படைத்த ரகுவிற்கும், குழந்தையின் தந்தை மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரியவந்ததும் அவர் கள்ளக்காதலை கண்டித்துள்ளார். இதற்கிடையே கள்ளக்காதலுக்கு இடையூறாக காதலியின் குழந்தை இருப்பதாக கருதி சம்பவத்தன்று ரகு குழந்தையை எடுத்து வந்து போலீசிடம் ஒப்படைத்தது தெரியவந்தது.
இதையடுத்து ரகு மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.