< Back
தேசிய செய்திகள்
ஐ.ஐ.டி. காரக்பூரில் 4-ம் ஆண்டு பொறியியல் மாணவர் தற்கொலை
தேசிய செய்திகள்

ஐ.ஐ.டி. காரக்பூரில் 4-ம் ஆண்டு பொறியியல் மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
18 Oct 2023 7:32 PM IST

ஐ.ஐ.டி. காரக்பூரை சேர்ந்த பொறியியல் துறை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா,

தெலுங்கானாவை சேர்ந்தவர் கிரண் சந்திரா (வயது 22). ஐ.ஐ.டி. காரக்பூரில் மின்சார துறையில் பொறியியல் படிப்பில் 4-வது ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி ஐ.ஐ.டி. காரக்பூர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், கிரண் சந்திராவின் திடீர் மறைவுக்கு அதிர்ச்சி உணர்வுடன், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி. காரக்பூரின் ஆசிரியர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீப காலங்களாக ஐ.ஐ.டி. காரக்பூரில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது செய்திகளில் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பைஜான் அகமது (வயது 23) என்ற மாணவர் இதே ஐ.ஐ.டி. காரக்பூரில் தற்கொலை செய்து கொண்டார்.

எனினும், அவர் ராகிங் செய்யப்பட்டு உள்ளார் என்றும் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும் அப்போது, அவரின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறினர். பிரேத பரிசோதனையில் அவருடைய உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன என பின்னர் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்