< Back
தேசிய செய்திகள்
பாரத் மாதா கி ஜே சொன்னால்தான் நாட்டில் இடம் உண்டு - மத்திய மந்திரியின் சர்ச்சை பேச்சு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

"'பாரத் மாதா கி ஜே' சொன்னால்தான் நாட்டில் இடம் உண்டு" - மத்திய மந்திரியின் சர்ச்சை பேச்சு

தினத்தந்தி
|
15 Oct 2023 12:57 AM IST

இந்தியாவில் வாழ விரும்பினால் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல வேண்டும் என்று மத்திய மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் மாநாடு ஒன்றில் மத்திய வேளாண் இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மாநிலத்தில் தேசிய சிந்தனை கொண்ட அரசு அமைய வேண்டும் எனக்கூறினார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்பினால், பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல வேண்டும். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் வாழ்க என்று சொல்வீர்களா? வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு' என பரபரப்பாக பேசினார்.

மேலும் அவர், 'பாரத் மாதா கி ஜே சொல்லாத, இந்துஸ்தான் மற்றும் பாரத் மீது நம்பிக்கை இல்லாத, 'பாகிஸ்தான் வாழ்க' மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் இருந்தால், அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். இங்கு தேவை இல்லை' என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்