< Back
தேசிய செய்திகள்
அவர்கள் இல்லையெனில் பா.ஜ.க.வில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவர்:  கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

அவர்கள் இல்லையெனில் பா.ஜ.க.வில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவர்: கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
19 Feb 2024 4:02 AM IST

பா.ஜ.க.வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் மற்றும் வசுந்தர ராஜே ஆகியோர் தனியாக அவர்களுக்கான கட்சிகளையே தொடங்கி விடுவார்கள்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மியின் தலைவரான கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமலாக்க துறை மூடப்பட்டு விட்டால் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டம் நீக்கப்பட்டு விட்டால், பா.ஜ.க.வில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள்.

அவர்களே, பல தலைவர்கள் பா.ஜ.க.வில் சேருவதற்கு காரணம். அவர்கள் இல்லையெனில், ஒருவரும் பா.ஜ.க.வில் சேரமாட்டார்கள் என கூறியுள்ளார்.

அப்படி நடக்குமென்றால், பா.ஜ.க.வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் மற்றும் வசுந்தர ராஜே ஆகியோர் தனியாக அவர்களுக்கான கட்சிகளையே தொடங்கி விடுவார்கள்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் விசாரணை அமைப்பு, கெஜ்ரிவாலுக்கு 6 சம்மன்கள் அனுப்பி, அவர் ஆஜராகாத நிலையில் இதனை அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்