< Back
தேசிய செய்திகள்
தேவைப்பட்டால் பிரதமர் மோடியுடன் தேவேகவுடா பேசுவார்- குமாரசாமி பேட்டி
தேசிய செய்திகள்

தேவைப்பட்டால் பிரதமர் மோடியுடன் தேவேகவுடா பேசுவார்- குமாரசாமி பேட்டி

தினத்தந்தி
|
21 Sep 2023 9:01 PM GMT

பெங்களூரு:-

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இரு கட்சிகளின் தலைவர்களும் பகிரங்கமாக கூறியுள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா, ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று எடியூரப்பா கூறினார். ஆனால் இதை தேவேகவுடா மறுத்தார்.

தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யவும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று டெல்லி சென்றார். அவர் டெல்லி புறப்படும் முன்பு பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து பேச டெல்லி செல்கிறேன். தொகுதிகள் பங்கீடு குறித்து நான் இதுவரை பேசவில்லை. பா.ஜனதா தலைவர்களை இன்று (நேற்று) மாலை சந்திக்கும்போது அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுவேன். 28 தொகுதிகளில் உள்ள நிலவரம், சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்த நிலை, அதன் பிறகு ஏற்பட்டுள்ள நிலை குறித்து பேச இருக்கிறேன்.

உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறேன். தேவைப்பட்டால் பிரதமர் மோடியும், தேவேகவுடாவும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்