< Back
தேசிய செய்திகள்
முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை - நிதிஷ் குமார்
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை - நிதிஷ் குமார்

தினத்தந்தி
|
18 Sept 2023 3:25 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகாரில் அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம். பீகாரில் பல வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்