< Back
தேசிய செய்திகள்
டி.கே.சிவக்குமார், சித்தராமையா விரும்பினால் பா.ஜனதா கட்சியில் சேரலாம்; சி.டி.ரவி பேட்டி
தேசிய செய்திகள்

டி.கே.சிவக்குமார், சித்தராமையா விரும்பினால் பா.ஜனதா கட்சியில் சேரலாம்; சி.டி.ரவி பேட்டி

தினத்தந்தி
|
19 Sept 2022 12:15 AM IST

டி.கே.சிவக்குமார், சித்தராமையா விரும்பினால் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

காங்கிரஸ் கட்சியில்...

பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இருந்து எந்தவொரு பயனும் இல்லை என்றும், அதிகாரம் கிடைக்காது என்றும் பலர் பா.ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளனர். பா.ஜனதா கட்சியில் சேர விருப்பப்பட்டு வருபவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம்.

வரவேற்க தயாராக உள்ளோம்

விருப்பப்பட்டால் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் பா.ஜனதா கட்சியில் சேரலாம். அவர்களை வரவேற்க தயாராக உள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையா மாநிலத்தில் ஒரு முக்கியமான தலைவர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் பல ரவுடி சீட்டர்கள் உள்ளதால் அதைக்கருத்தில் கொண்டு மாநில அரசு சித்தராமையாவிறகு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்