< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேசத்தில் ஐ.சி.எம்.ஆர். சார்பில் டிரோன் மூலம் மருத்துவ பொருட்களை அனுப்பும் சோதனை முயற்சி
|20 Oct 2023 6:45 PM IST
ஐ.சி.எம்.ஆர். சார்பில் இமாச்சல பிரதேசத்தில் டிரோன் மூலம் மருத்துவ பொருட்களை அனுப்பும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சிம்லா,
மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் அதிகம் கொண்ட இமாச்சல பிரதேசத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்.) சார்பில், டிரோன் மூலம் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கும் சோதனை நடைபெற்றது.
அதன்படி கடுமையான நிலப்பரப்பைக் கொண்ட லாஹல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களுக்கு இடையே டிரோன் மூலம் மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன. இனி வரும் காலங்களில் மருந்துகள், மாத்திரைகள், இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை டிரோன் மூலம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.