< Back
தேசிய செய்திகள்
நடுக்கடலில் சிக்கி தவித்த 11 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
தேசிய செய்திகள்

நடுக்கடலில் சிக்கி தவித்த 11 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை

தினத்தந்தி
|
12 Feb 2024 10:59 AM IST

இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த படகை இந்திய கடலோர காவல் படை கப்பல் மீட்டது.

புதுடெல்லி,

இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 5-ந்தேதி முதல் நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த ஐ.எப்.பி. கிங் (IFB King) படகில் இருந்த 11 பணியாளர்களை இந்திய கடலோர காவல் படை கப்பல் விக்ரம் பத்திரமாக மீட்டது.

மேலும் மினிகாய் தீவுக்கு மேற்கே 280 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்த படகு பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டு ஐ.சி.ஜி.எஸ். மினிகாய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த தகவலை இந்திய கடலோர காவல் படை தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய கடலோர காவல் படை கப்பல் விக்ரம், அரபிக்கடலில் உள்ள கடற்கரை ஒன்றில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்ட இந்திய வந்து கொண்டிருந்த வணிக கப்பலை மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்