< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிட மாற்றம் கர்நாடக அரசு உத்தரவு
|1 Sept 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு விட்டுள்ளது.
பெங்களூரு-
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கர்நாடக அரசு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திட்டமிடல், திட்ட கண்காணிப்பு, புள்ளியியல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வளர்ச்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பணியில் உள்ள ரமணரெட்டி பணி ஓய்வு பெற்றார்.