< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'மிக்-21' போர்விமானங்கள் இயக்கத்தை நிறுத்த விமானப்படை முடிவு
|21 May 2023 2:28 AM IST
‘மிக்-21’ போர்விமானங்கள் இயக்கத்தை நிறுத்த விமானப்படை முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
முந்தைய சோவியத் ரஷியா கால தயாரிப்பான 'மிக்-21' போர்விமானங்கள் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இவற்றின் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 1960-ம் ஆண்டு தொடங்கி இதுவரை இந்த விமானங்கள் சுமார் 400 விபத்துகளை சந்தித்திருப்பதுதான் இதற்கு காரணம்.
கடந்த 8-ந்தேதியும் ராஜஸ்தானின் ஹனுமன்கர் நகரில் ஒரு வீட்டின் மீது மிக்-21 விமானம் விழுந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மிக்-21 போர்விமானங்கள் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்திய விமானப் படை முடிவெடுத்துள்ளதாகவும், அவற்றில் நடந்துவரும் பாதுகாப்பு பரிசோதனை முழுமையாக முடிந்தபிறகே பறப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் விமானப்படை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.