< Back
தேசிய செய்திகள்
பனியால் மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை: லடாக்கை சேர்ந்த 388 பேர் விமானம் மூலம் மீட்பு
தேசிய செய்திகள்

பனியால் மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை: லடாக்கை சேர்ந்த 388 பேர் விமானம் மூலம் மீட்பு

தினத்தந்தி
|
27 Feb 2023 12:13 AM IST

பனியால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் லடாக்கை சேர்ந்த 388 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.

ஜம்மு,

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை, பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளது. அதனால், ஜம்முவுக்கு வந்த லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 388 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.

அவர்களுக்காக இந்திய விமானப்படை 2 விமானங்களை அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் மூலம் ஜம்முவில் இருந்து 388 பேரும் ஏற்றப்பட்டு, லடாக்கில் உள்ள லேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்