< Back
தேசிய செய்திகள்
உங்கள் கால்களில் விழுகிறேன்..- சாலைப்பணிகளை விரைந்து முடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கெஞ்சிய பீகார் முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

'உங்கள் கால்களில் விழுகிறேன்..'- சாலைப்பணிகளை விரைந்து முடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கெஞ்சிய பீகார் முதல்-மந்திரி

தினத்தந்தி
|
11 July 2024 7:58 AM IST

பாட்னா,

பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து, அந்த சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத் எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, 'மாநிலத்தின் நலனுக்காக சாலைப்பணிகளை விரைந்து முடியுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கால்களில்கூட விழுகிறேன்' என்று கூறியபடி அங்கிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நோக்கி நெருங்கினார் நிதிஷ்குமார். இதனால் மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்துக்கொண்ட அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, பல சில அடிகள் பின்வாங்கி, 'ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்' என்று பதற்றத்துடன் கூறினார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பலம் குறைந்த முதல்-மந்திரியால் இதைத்தான் செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்