< Back
தேசிய செய்திகள்
இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
10 Oct 2023 3:20 PM IST

இக்கட்டான சூழலில் உள்ள இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இஸ்ரேல்-ஹமாஸ் போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 1,300ஐ நெருங்கி உள்ளது. இந்நிலையில், போர் நிலவரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எடுத்து கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும். கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்