< Back
தேசிய செய்திகள்
சுவிஸ் வங்கிகளில் ரகசிய முதலீடு அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
தேசிய செய்திகள்

சுவிஸ் வங்கிகளில் ரகசிய முதலீடு அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தினத்தந்தி
|
24 Aug 2022 12:40 AM IST

அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை,

பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்