< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
2024- தேர்தலில் பிரதமர் வேட்பாளரா? நிதிஷ் குமார் அளித்த பதில்
|12 Aug 2022 2:51 PM IST
2024- நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை என்று நிதிஷ் குமார் கூறினார்.
பீகார் மாநிலத்தில் பா.ஜனதா ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்திய நிதிஷ்குமார், பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த பீகாரை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி, நிதிஷ்குமார் துணை ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்ததாகவும், அதை பா.ஜனதா நிறைவேற்றாததால் அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில், பாட்னாவில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம்,
வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நீங்கள்தான் பிரதமர் வேட்பாளருக்கான முகமாக இருப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை" என்று மறுத்துவிட்டார்.