< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியில்லை: அசோக் கெலாட் அறிவிப்பு
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியில்லை: அசோக் கெலாட் அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Sept 2022 3:11 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவது இல்லை என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சோனியா காந்தியை சந்தித்த பிறகு அசோக் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அசோக் கெலாட் இது பற்றி கூறுகையில், " ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடியால் நான் வருத்தம் அடைந்தேன். சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரினேன்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு நான் போட்டியிடவில்லை" என்றார். ராஜஸ்தான் முதல் மந்திரியாக நீங்கள் நீடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் கெலாட், சோனியா காந்தி இது பற்றி முடிவு செய்வார்" என்றார்.

மேலும் செய்திகள்