< Back
தேசிய செய்திகள்
அரசியலுக்குள் மதத்தினை கொண்டு வர விரும்பவில்லை; மம்தா பானர்ஜி பேச்சு
தேசிய செய்திகள்

அரசியலுக்குள் மதத்தினை கொண்டு வர விரும்பவில்லை; மம்தா பானர்ஜி பேச்சு

தினத்தந்தி
|
21 Aug 2023 10:07 PM IST

நமது மனங்களிலும், எண்ணங்களிலும் உள்ள மதத்தினை அரசியலுக்குள் கொண்டு வர விரும்பவில்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் உள்ள நேதாஜி உள்ளரங்கத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் இன்று கலந்து கொண்டு பேசினார்.

அரசியலுக்குள் எந்த மதத்தினையும் கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. அது அந்த மதம் சிறுமைப்பட வழிவகுக்கும். மதம் நமது மனங்களிலும், எண்ணங்களிலும் உள்ளன என்று அவர் பேசியுள்ளார்.

பா.ஜ.க. தன்னை பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றிய கவலை தனக்கு இல்லை என கூறிய அவர், எந்தவொரு மதமும் மற்றொரு மதத்துடன் மோதி கொள்ளவில்லை என நான் உறுதி செய்வேன் என்று பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்