நான் நன்றாக இருக்கிறேன் - வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மம்தா பானர்ஜி பேட்டி
|மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் சில வழக்கமான பரிசோதனைகளை நடத்தினர்.
கொல்கத்தா,
கடந்த ஜூன் மாதம் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கிய போது மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர், செப்டம்பரில், ஸ்பெயின் மற்றும் துபாயில் 12 நாள் சுற்றுப்பயணம் சென்றபோது அவரது இடது முழங்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று அவர் இடது முழங்காலில் பரிசோதனை செய்வதற்காக மாநில அரசு நடத்தும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சில வழக்கமான பரிசோதனைகளை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, "கவலைப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன்.
நான் இங்கு வழக்கமான பரிசோதனைக்காக வந்தேன். நான் இப்போது சாதாரணமாக தினமும் சுமார் 20,000 அடிகள் நடக்கிறேன். மருத்துவமனை எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் குறித்து நான் மருத்துவர்களுடன் விவாதித்தேன்" என்று அவர் கூறினார். பின்னர், காரில் ஏறுவதற்கு முன்பு, மம்தா பானர்ஜி தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.