< Back
தேசிய செய்திகள்
பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை
தேசிய செய்திகள்

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை

தினத்தந்தி
|
2 Feb 2023 11:37 AM IST

கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் உத்தரப்பிரதேச சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆனார்.

திருவனந்தபுரம்,

பயங்கரவாத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உ.பி.அரசு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது.

28 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

2020ம் ஆண்டு நடந்த ஹத்ராஸ் கூட்டு பாலியல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது உபா சட்டத்தின் கீழ் உ.பி அரசால் கைது செய்யப்பட்டார்.

உ.பி சிறையிலிருந்து வெளிவந்த பின் சித்திக் கப்பான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

உ.பி சிறையிலிருந்து 28 மாதங்களுக்கு பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி. என் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது என்றார்.

மேலும் செய்திகள்