< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் - மோகன் யாதவ் பேட்டி
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் - மோகன் யாதவ் பேட்டி

தினத்தந்தி
|
12 Dec 2023 12:12 PM IST

எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

ஜெய்ப்பூர்,

மத்திய பிரதேசத்தின் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகன் யாதவ் நாளை பதவியேற்க உள்ளார். அவருடன் துணை முதல்-மந்திரிகளாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் நாளை பதவியேற்க உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மோகன் யாதவ்,

மத்திய பிரதேசத்தின் 8.5 கோடி மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது. எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.

முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் தொடங்கப்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் எனது ஆட்சியிலும் தொடரப்படும். நாளை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரதமரின் தலைமையில் பாஜக அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய பிரதேசத்தில் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்