< Back
தேசிய செய்திகள்
நண்பர்களுடன் சுற்றுலா: அருவியில் குளித்தபோது இளைஞருக்கு நேர்ந்த சோகம்
தேசிய செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுலா: அருவியில் குளித்தபோது இளைஞருக்கு நேர்ந்த சோகம்

தினத்தந்தி
|
11 Jun 2024 5:43 PM IST

நண்பர்களுடன் அருவியில் குளித்தபோது தண்ணீரில் அடித்துசெல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஷ்ரவன் (25). இவர் இ-காமஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஷ்ரவன் தனது நண்பர்களுடன் கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சிக்மங்களூருவில் உள்ள ஹிபி அருவிக்கு சென்ற அனைவரும் அங்கு குளித்துள்ளனர்.

ஷ்ரவன் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது அருவில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. அப்போது, பாறையில் நின்று குளித்துக்கொண்டிருந்த ஷ்ரவன் திடீரென தவறி விழுந்தார். இதையடுத்து அவர் அருவி தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.

இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் ஷ்ரவனை துரிதமாக மீட்டனர். அருவியில் குளித்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு டாக்டர் இருந்துள்ளார். உடனடியாக அவர் ஷ்ரவனுக்கு முதலுதவி அளித்துள்ளார். பின்னர், ஷ்ரவன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனையில் ஷ்ரவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

நண்பர்களுடன் அருவிக்கு குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்