< Back
தேசிய செய்திகள்
அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களால் சொகுசு காருக்குள்  சிறுமி பாலியல் பலாத்காரம்
தேசிய செய்திகள்

அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களால் சொகுசு காருக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்

தினத்தந்தி
|
3 Jun 2022 10:41 AM GMT

சொகுசு காருக்குள் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார். இதில் தெலுங்கானா மாநிலத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள் 5 கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமி அங்குள்ள பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி கூட வந்த 5 சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

கூடுதலாக கிடைத்துள்ள தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் ஒருவன் எம்எல்ஏ மகன் என்பதும் மற்றொருவன் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, சம்பவத்தன்று 5 சிறுவர்களுடன் சிறுமி பேசி கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மது அருந்தாத பார்ட்டி என்றும், பார்ட்டியில் இருந்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்படவில்லை என்றும் பப் நிர்வாகம் போலீசாரிடம் கூறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சிசிடிவி காடட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ வழக்கின் முக்கிய சாட்சியாக போலீஸ் கையில் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தெலுங்கானா பாஜக ''பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தும் ஐதராபாத் போலீசார் இதுவரை எந்த குற்றவாளியையும் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து போலீசார் மூன்று தனிப்படை அமைத்து பல்வேறு மாநிலங்களில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு மண்டலம்) ஜோயல் டேவிஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்