< Back
தேசிய செய்திகள்
ஐதராபாத் சுதந்திர தினம்; ஓராண்டு கொண்டாட மத்திய அரசு முடிவு
தேசிய செய்திகள்

ஐதராபாத் சுதந்திர தினம்; ஓராண்டு கொண்டாட மத்திய அரசு முடிவு

தினத்தந்தி
|
3 Sep 2022 10:56 AM GMT

ஐதராபாத் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை வரும் 17-ந்தேதி முதல் ஓராண்டுக்கு கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.



புதுடெல்லி,



தெலுங்கானா மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியாக ஐதராபாத் உள்ளது. அதன் தலைநகராகவும் விளங்கி வருகிறது. சுதந்திரம் பெறுவற்கு முன்பு ஐதராபாத் மாகாணம், நிஜாம்களின் அரசாட்சிக்கு உட்பட்டு இருந்தது.

இதன்பின்பு, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி ஆபரேசன் போலோ என்ற பெயரிலான காவல் துறையின் அதிரடி நடவடிக்கையின் கீழ் ஒருங்கிணைந்த இந்தியாவுடன் ஐதராபாத் இணைக்கப்பட்டது.

ஐதராபாத் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை வரும் 17-ந்தேதி முதல் ஓராண்டுக்கு கொண்டாடுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2022-ம் ஆண்டு, செப்டம்பர் 17-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி வரை ஓராண்டுக்கு கொண்டாடப்பட உள்ளது.

இதனை மத்திய கலாசார துறை மந்திரி கிஷன் ரெட்டி இன்று கூறியுள்ளார். இதற்காக ஐதரபாத் நகரில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள தெலுங்கானா, மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும் செய்திகள்