< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐதராபாத்தில் மயக்க ஊசி செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை
|8 July 2024 4:09 AM IST
ஐதராபாத்தில் மயக்க ஊசி செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள மாநில அரசின் நிஜாம் மருத்துவமனையில் 46 வயதான பெண் டாக்டர் பணியாற்றி வந்தார். அவர் மயக்க மருந்தியல் துறையின் பேராசிரியரும் ஆவார். ஆஸ்பத்திரியில் பணி முடிந்த பிறகு வீட்டுக்கு சென்ற அவர், தனது கையில் மயக்க மருந்தை (அனஸ்தீசியா) ஊசி மூலம் செலுத்தினார்.
மறுநாள் நீண்ட நேரமாக கணவரின் தொலைபேசி அழைப்பை ஏற்காததால், சந்தேகம் அடைந்த கணவர் நேராக வீட்டுக்கு சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பெண் டாக்டர் உணர்வற்ற நிலையில் கிடந்தார். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.