வயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு முதலிரவில் மணமகள் மீது பாய்ந்த மணமகன் - பறிபோன உயிர்
|வயாகரா மாத்திரைகளை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி, மணமகளுக்கு மணமகன் உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
முதலிரவின்போது நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க மணமகன் வயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு உடலுறவு வைத்துள்ளார். முதலிரவில் அவர் மிருகத்தனமாக நடந்து கொண்ட நிலையில், படுகாயம் அடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ஹாமிர்பூரில் கடந்த 3 -ம் தேதி ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. முதலிரவில் நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டும் என்று கருதிய மணமகன் அதற்காக வயாகரா மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டுள்ளார்.
மாத்திரைகள் உதவியுடன் மணமகன் மிருகத்தனமாக உடலுறவு வைத்த நிலையில், மணமகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மணமகளின் உறவினர்கள், அவரை மருத்துவமனையில் கடந்த 7 -ம் தேதி அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 10 -ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபரத்தை அறிந்த மணமகன் தலைமறைவாகியுள்ளார்.மணமகளின் பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு சகோதரர் உள்ளார்.
தங்கையின் கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஹாமிர்பூர் காவல் நிலையம் அத்தகைய புகாரைப் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. "கோட்வாலி நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக எந்தத் தகவலும்/புகாரும் பெறப்படவில்லை. புகாரைப் பெற்றதும், உரிய விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயாகரா மாத்திரைகளை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி, மணமகளுக்கு மணமகன் உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.