மைனர் பெண்ணை மிரட்டி நண்பர்கள் 3 பேருக்கு விருந்தாக்கிய கணவர்
|சித்ரதுர்காவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் மைனர் பெண்ணை, அவளது கணவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு விருந்தாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு;
மைனர் பெண்ணுக்கு திருமணம்
சித்ரதுர்கா டவுன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் இர்பான்(வயது 25). இவரும், அதேப்பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இதைதொடர்ந்து கடந்த ஆண்டு இர்பான், மைனர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதாவது திருமணம் செய்யும்போது மைனர் பெண்ணுக்கு 16 வயது என்று கூறப்படுகிறது.
மைனர் பெண்ணுக்கு திருமண நடந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு வரவில்லை. இதற்கிடையே திருமணம் முடிந்த புதிதில் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இர்பான், மனைவியான மைனர் பெண்ணிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கூறி வந்துள்ளார்.
ஆனால் அதற்கு பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இர்பான், பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
நண்பர்களுக்கு விருந்தாக்கினார்
இந்த நிலையில் இர்பான், மனைவியான மைனர் பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் தனது நண்பர்களுக்கு விருந்தாக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி இர்பான், தனது நண்பர்களான முஜாமில், சகபாஜ் உள்பட 3 பேருக்கு தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த 7-ந் தேதி அன்று இர்பான், மனைவியை சித்ரதுர்கா புறநகர் பகுதியில் உள்ள ஓரிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான 3 பேரையும் வரவழைத்துள்ளார். பின்னர் இர்பான் தனது மனைவி என்றும் பாராமல் மைனர் பெண்ணை, நண்பர்கள் 3 பேருக்கும் விருந்தாக்கியுள்ளார்.
அதன்படி பெண்ணை,3 பேரும் கற்பழித்துள்ளனர். மேலும் அவர்களுடன் சேர்ந்து இர்பானும் கற்பழித்துள்ளார். இதைதொடர்ந்து பெண்ணிடம், இர்பான் நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதனால் பயந்துபோன மைனர் பெண் நடந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி கொண்டு மைனர் பெண்ணை, இர்பான் மற்றும் அவரது நண்பர்கள் பலமுறை கூட்டாக கற்பழித்துள்ளனர்.
வலைவீச்சு
இந்த நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான மைனர் பெண் வேறு வழியின்றி சித்ரதுர்கா மகளிர் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்து புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த இர்பான் உள்பட 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதையறிந்த போலீசார் தனிப்படை அமைத்து 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பபைஏற்படுத்தி வருகிறது.