< Back
தேசிய செய்திகள்
சகோதரி வீட்டுக்கு ரக்சா பந்தன் கொண்டாட செல்ல கணவர் அனுமதி மறுப்பு; மகனுடன் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

சகோதரி வீட்டுக்கு ரக்சா பந்தன் கொண்டாட செல்ல கணவர் அனுமதி மறுப்பு; மகனுடன் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
2 Sept 2023 12:51 PM IST

மராட்டியத்தில் ரக்சா பந்தன் கொண்டாட சகோதரி வீட்டுக்கு செல்ல கணவர் அனுமதி மறுத்த வருத்தத்தில், 1 வயது மகனுடன் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புனே,

மராட்டியத்தின் தானே நகரில் கோத்பந்தர் சாலையில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் வசித்து வந்தவர் பிரியங்கா மொகிதே (வயது 26). இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது.

சமீபத்தில் ரக்சா பந்தனை (ஆகஸ்டு 30) முன்னிட்டு அதனை கொண்டாட தன்னுடைய சகோதரியின் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கணவரிடம் கூறியுள்ளார்.

ஆனால், குழந்தையை தூக்கி கொண்டு செல்ல கூடாது என பிரியங்காவின் கணவர் கண்டித்துள்ளார். இதனால், அந்த தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதன்பின்பு, நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பிளாட்டின் பால்கனியில் இருந்து குழந்தையுடன் கீழே குதித்துள்ளார்.

சத்தம் கேட்டு கட்டிடத்தின் பிற தளங்களில் வசித்து வருபவர்கள் வெளியே வந்துள்ளனர். இதில், தாய் மற்றும் மகன் என இரண்டு பேரும் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், 2 பேரும் உயிரிழந்து விட்டனர். இதுபற்றி தற்செயலாக நடந்த மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்