< Back
தேசிய செய்திகள்
மனைவி மீது சந்தேகம்: திருமணமான மூன்று மாதத்தில் அடித்து கொலை - கணவன் கைது
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்: திருமணமான மூன்று மாதத்தில் அடித்து கொலை - கணவன் கைது

தினத்தந்தி
|
6 Sept 2022 6:58 PM IST

திருவனந்தபுரம் அருகே திருமணம் ஆன மூன்று மாதத்தில் கணவன் தன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது வர்க்கலா இங்கு வசிப்பவர் அனீஸ் (வயது 32). ஆலப்புழா நகர சேர்ந்தவர் நிகிதா (25). இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஜூன் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு இவர்கள் ஒரு மாதம் சொந்த ஊரில் தங்கி விட்டு பின்பு வெளிநாடு சென்றார்கள்.

வெளிநாட்டில் இவர்கள் இருக்கும் போது மனைவியை குறித்து இவருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டில் வைத்து இவர்கள் அடிக்கடி குடும்பத்தகறாரில் ஈடுபட்டு வந்தார்கள். தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் இருவரும் சொந்த ஊர் திரும்பி வந்தார்கள்.

இங்கு வந்து மீண்டும் இவர்கள் சந்தேகத்தின் பெயரில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு 12 மணி அளவில் இவர்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த கணவன் அங்கிருந்த நில விளக்கை எடுத்து மனைவியின் மண்டையில் இரண்டு முறை ஓங்கி ஓங்கி அடித்தார். பின்பு வயிற்றிலும் பல முறை குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த மனைவியை வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் வர்க்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். விவரம் அறிந்த வர்க்கலா போலீசார் கணவன் மற்றும் அவருக்கு உதவி செய்த ஒரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் திருமணமான மூன்று மாதத்தில் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்