< Back
தேசிய செய்திகள்
இளமையாக இருக்க நரமாமிசம்...! நிர்வாண பூஜை...! நரபலி...! பாலியல் சைக்கோவை நம்பி ஏமாந்த கேரள தம்பதி
தேசிய செய்திகள்

இளமையாக இருக்க நரமாமிசம்...! நிர்வாண பூஜை...! நரபலி...! பாலியல் சைக்கோவை நம்பி ஏமாந்த கேரள தம்பதி

தினத்தந்தி
|
12 Oct 2022 4:10 PM IST

கேரள போலீசார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் 2 பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 3 பேரையும், வரும் அக்டோபர் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா - பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்கள் ஆகும் நோக்கில் நரபலி கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கேரள போலீசார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் கூறப்படுவதாது:-

இடைத்தரகர் போலி மந்திரவாதி முகம்மது ஷபி பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் உள்ளபகவல் சிங்கை தொடர்புகொண்டுள்ளார்.

உடல் நலம் நன்றாக இருக்கவும், செல்வம் செழிக்கவும் ஒரு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டுவிட்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்றும் செல்வம் கொட்டும் என கூறியுள்ளார். மேலும் நரபலிக்கு தேவையான பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் ஷபி கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பத்மாவை ஒப்படைக்க முகமது ஷபிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பேசப்பட்டுஉள்ளது. 15 ஆயிரத்தை முகமது ஷபி முன்பணமாக வாங்கி உள்ளார்.

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த ரோஸ்லின் என்ற பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறி அழைத்து சென்று ஷபி மற்றும் பகவல்சிங் லைலா முதலில் நரபலி கொடுத்துள்ளனர். இதற்க்கு உரிய பலன் கிடைக்காத காரணத்தால் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவையும் நரபலி கொடுத்துள்ளனர். இந்த இரண்டு பேரையும் வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி முகமது ஷப அழைத்து வந்து உள்ளார்.

அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக் கட்டிலில் கட்டி வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளாளனர். இதனையடுத்து நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷபி கூறியதின் அடிப்படையில் இருவரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.

பூஜையின் போது ஷபி கணவர் பகவந்த் சிங் முன் மனைவி லைலாவுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார்.

முகம்மது ஷபி மீது கஞ்சா கடத்தல், பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும், 75 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது.

ஷபி ஒரு சைக்கோவாக இருக்காலம். விசாரணையில் யாரையும் கொன்று விடுவேன் என்றும், ரத்தத்தைக் கண்டு அஞ்சமாட்டேன் என்றும் ஷபி கூறியுள்ளார்.

குற்றவாளி ஷபி குறித்து கொச்சி நகர போலீஸ் கமிஷனர் எச்.நாகராஜு கூறியதாவது:-

பத்து ஆண்டுகளில் 15 வழக்குகளில் ஷபி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஷபி ஒரு பாலியல் மனநோயாளி மற்றும் சோகமான நபர்.ஷபி 6ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனித கறி சாப்பிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்