< Back
தேசிய செய்திகள்
காதலர் தினத்தில் இப்படி அணைத்து கொள்ளுங்கள்... மகிழ்ச்சி பெருகும்; இந்திய அமைப்பு விடுத்த கோரிக்கை
தேசிய செய்திகள்

காதலர் தினத்தில் இப்படி அணைத்து கொள்ளுங்கள்... மகிழ்ச்சி பெருகும்; இந்திய அமைப்பு விடுத்த கோரிக்கை

தினத்தந்தி
|
8 Feb 2023 6:57 PM IST

காதலர் தினத்தில் இப்படி அணைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி பெருகும் என இந்திய அமைப்பு ஒன்று மக்களிடம் கோரிக்கை விடுத்து உள்ளது.



புதுடெல்லி,


வேலண்டைன்ஸ் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை காதலர் தினம் என்று பல்வேறு நாடுகளிலும் இளஞ்ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியம் இன்று நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்து உள்ளது.

அதில், இந்த தினத்தில் நீங்கள் பசுக்களை அணைத்து கொண்டாடுங்கள். அப்படி செய்யும்போது, உணர்வுரீதியாக வளமும் மற்றும் கூட்டான மகிழ்ச்சியும் கிடைக்க பெறும்.

இந்திய கலாசாரம் மற்றும் ஊரக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பசு என நாம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய வாழ்வை நீடித்திருக்க செய்வதுடன், கால்நடை வளம் மற்றும் பல்லுயிர்மம் ஆகியவற்றையும் பிரதிபலிக்கின்றது.

அன்னை போல் நம்மை வளர்த்தெடுக்கும் இயற்கையான பண்புகளால், அனைவருக்கும் வழங்கும் குணநலன்களால் அது காமதேனு என்றும் கோமாதா என்றும் அழைக்கப்படுகிறது. மனித இனத்திற்கு வளங்களை வழங்குகிறது என அதுபற்றிய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

வளர்ந்து வரும் மேற்கத்திய கலாசார போக்கால், வேதகால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. பசுவை பாதுகாப்பது அதனை பாதுகாக்க உதவும் என்றும் தெரிவித்து உள்ளது.

அதனால், வாழ்வை மகிழ்ச்சியாக்க மற்றும் நல்ல ஆற்றல் முழுவதும் கிடைக்க தாயான பசுவின் முக்கியத்துவங்களை மனதில் கொண்டு, பிப்ரவரி 14-ந்தேதியை பசுக்களை விரும்புவோர் அனைவரும் பசுவை அணைக்கும் நாளாக கொண்டாடலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்