< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
உப்பள்ளியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

27 Jun 2023 8:29 PM IST
உப்பள்ளியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்்திற்கு உட்பட்ட கணேஷ் பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பியோடினார்.
அவரை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் முக்கேரி ஹள்ளியை சேர்ந்த சோகேல் நதாப் (வயது30) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கல்லூரி மாணவர்களை குறி வைத்து சோகேல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோகேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.