< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பேருந்து சுவற்றில் மோதி விபத்து: பள்ளிக்கு சென்ற 24 சிறுவர்கள் காயம்
|27 Aug 2022 4:58 PM IST
இமாசல பிரதேசத்தில் பள்ளி பேருந்து சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
சிம்லா,
இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று கட்டுபாட்டை இழந்து சுவரில் மோதியதில் பள்ளிக்கு சென்ற 24 சிறுவர்கள் காயம் அடைந்தனர். மங்கல் என்ற இடத்தில் உள்ள சிமெண்ட் நிறுவனம் அருகே பேருந்து வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்து பேருந்து சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்த பள்ளி சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.