< Back
தேசிய செய்திகள்
சுதந்திர இந்தியாவின் சிறந்த கல்வி மந்திரி மணீஷ் சிசோடியா- பஞ்சாப் முதல் மந்திரி டுவீட்

Image Courtesy: PTI

தேசிய செய்திகள்

"சுதந்திர இந்தியாவின் சிறந்த கல்வி மந்திரி மணீஷ் சிசோடியா"- பஞ்சாப் முதல் மந்திரி டுவீட்

தினத்தந்தி
|
19 Aug 2022 11:28 PM IST

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா உள்ளார். மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை "சுதந்திர இந்தியாவின் சிறந்த கல்வி அமைச்சர்" என்று புகழ்ந்துள்ளார்.

மணீஷ் சிசோடியா குறித்து பகவந்த் மான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சுதந்திர இந்தியாவின் சிறந்த கல்வி மந்திரி மணீஷ் சிசோடியா. இன்று அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தி நாளிதழ் தி நியூயார்க் டைம்ஸ் அவரது புகைப்படத்தை முதல் பக்கத்தில் அச்சிட்டுள்ளது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மணீஷ் சிசோடியா வீட்டிற்கு சிபிஐயை அனுப்பியுள்ளார். இந்தியா எப்படி இப்படி முன்னேறும்?" என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்