< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வாரிய தலைவர்கள் நீக்கம்: எடியூரப்பாவுக்கு எதிரான இன்னும் எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும்?- காங்கிரஸ் கேள்வி
|13 July 2022 10:01 PM IST
எடியூரப்பாவுக்கு எதிரான இன்னும் எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காரணம் தெரிவிக்கால் முதல்-மந்திரி பதவியை விட்டு எடியூரப்பா நீக்கப்பட்டார். எடியூரப்பா மேற்கொள்ள திட்டமிட்ட சுற்றுப்பயணத்திற்கு பா.ஜனதா தடை விதித்தது. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு எம்.எல்.சி. பதவி நிராகரிகப்பட்டது. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். எடியூரப்பாவுக்கு எதிராக இன்னும் எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும்?. இதற்கு பா.ஜனதா பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.