நடிகர் வசிஷ்ட சிம்ஹாவுடன் காதல் மலர்ந்தது எப்படி?; நடிகை ஹரிப்பிரியா டுவிட்டரில் ருசிகரம்
|நடிகர் வசிஷ்ட சிம்ஹாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து நடிகை ஹரிப்பிரியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
நட்சத்திர ஜோடி
கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர ஜோடி வசிஷ்ட சிம்ஹா- ஹரிப்பிரியா. கன்னட நடிகர்-நடிகையான இருவரும் தெலுங்கு படமான 'எவரு' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசு உலா வந்தது. இதை அவர்கள் மறுக்கவும் இல்லை. அமோதிக்கவும் இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களுக்கு அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ளது.
இதனால் அவர்களது ரசிகர்கள் இருவரில் யார் முதலில் காதலை வெளிப்படுத்தினர்?. இவர்களுக்கு காதல் எப்படி மலர்ந்தது என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.
காதல் மலர்ந்தது எப்படி?
இந்த நிலையில் வசிஷ்ட சிம்ஹா- ஹரிப்பிரியா இடையே காதல் எப்படி மலர்ந்த அழகிய காதல் கதையை ஹரிப்பிரியாவே தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அதில், நான் கடந்த சில ஆண்டுகளாக லக்கி, ஹேப்பி என இரு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறேன். இதில் கடந்த ஆண்டு லக்கி இறந்துபோனது. இதனால் ஹேப்பி தனிமையில் வாடியது. லக்கி இறந்த துக்கத்தில் ஹேப்பி சுட்டித்தனத்தை இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் எனது அன்பானவர் வசிஷ்ட சிம்ஹா எனக்கு கிரிஸ்டல் என்ற நாய்க்குட்டியை பரிசாக வழங்கினார். முதலில் ஹேப்பியும், கிரிஸ்டலும் நட்பாக பழகவில்லை. நாட்கள் செல்ல செல்ல தற்போது ஹேப்பியும், கிரிஸ்டலும் நட்பு பாராட்டி வருகின்றன. இரண்டும் ஒன்றாக உணவருந்துகிறது. ஒன்றாக செல்லமாக சண்டையிட்டு விளையாடி மகிழ்கின்றன.
கிரிஸ்டலை எனக்கு வசிஷ்ட சிம்ஹா பரிசாக அளித்த போது அதில் ஒரு தகவல் மறைந்திருந்தது. தற்போது அது எனக்கு தெரிந்துவிட்டது. கிரிஸ்டல் நாய்க்குட்டியின் அடிவயிற்றில் இருதய வடிவில் கருப்பு நிறம் உருவாகியுள்ளது. கிரிஸ்டல், ஹேப்பியுடன் நட்பாக வளரவளர எங்கள் (வசிஷ்ட சிம்ஹா-ஹரிப்பிரியா) நட்பு வளர்ந்து காதலானது என கவிதைப்போல் தனது காதல் கதையை ஹரிப்பிரியா கூறியுள்ளார். அத்துடன் லக்கி, ஹேப்பி, கிரிஸ்டல் நாய்க்குட்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.