< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒரு நாட்டிற்கு இரண்டு கொடி, இரண்டு பிரதமர் எப்படி இருக்க முடியும்? மக்களவை விவாதத்தில் அமித் ஷா பேச்சு
|5 Dec 2023 4:20 PM IST
நம் நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம் என அமித் ஷா பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
விவாதத்தில் பங்கேற்று பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சவுகதா ராய், சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டிற்கு இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு கொடிகள் எப்படி இருக்க முடியும்? இதை செய்தவர்கள், தவறு செய்துள்ளனர். நம் நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம். அதை செய்துள்ளோம்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.