< Back
தேசிய செய்திகள்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் சோதனை: கேரளாவில் இன்று முழுஅடைப்பு
தேசிய செய்திகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் சோதனை: கேரளாவில் இன்று முழுஅடைப்பு

தினத்தந்தி
|
23 Sept 2022 3:34 AM IST

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் சி.பி.முகம்மது பஷீர், தேசிய தலைவர் சலாம், தேசிய பொது செயலாளர் நஜீமுதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா உள்பட 15-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்