< Back
தேசிய செய்திகள்
வீடு இடிந்து தாய் - மகள் பரிதாப சாவு
தேசிய செய்திகள்

வீடு இடிந்து தாய் - மகள் பரிதாப சாவு

தினத்தந்தி
|
13 July 2022 2:00 AM IST

வீடு இடிந்ததில் தாய் - மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார்வார்:

கர்நாடகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதுபோல் உத்தர கன்னடா மாவட்டத்திலும் தொடர் கனமழை கொட்டி வருகிறது. நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கனமழையால் ஹலியால் தாலுகா முர்கவாடா கிராமத்தில் ஒரு குடிசை வீடு இடிந்தது. இதில் அந்த வீட்டில் வசித்து வந்த ருக்மணி(வயது 37), அவரது மகள் ஸ்ரீதேவி(13) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதாவது ருக்மணி, தனது மகள் ஸ்ரீதேவி மற்றும் கணவருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அதிகாலையில் பெய்த கனமழையின்போது வீடு இடிந்ததால் ருக்மணியும், ஸ்ரீதேவியும் பரிதாபமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். ருக்மணியின் கணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் பிரகாஷ், தாலுகா பஞ்சாயத்து செயல் அதிகாரி பரசுராம் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஹலியால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்