< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மசாஜ் செய்வதாக கூறி வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விடுதி உரிமையாளர் கைது
|8 Jan 2024 12:29 AM IST
வெளிநாட்டு பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், விடுதி உரிமையாளரை கைதுசெய்தனர்.
ஆலப்புழா,
கேரள மாநிலம் ஆலப்புழா நகரில் கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை ஷயாஸ் (வயது 27) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த அறை கதவை திறந்து ஷயாஸ் உள்ளே சென்றார். அப்போது தனியாக இருந்த சுற்றுலா பயணியிடம் மசாஜ் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி, இதுகுறித்து ஆலப்புழா தெற்கு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஷயாசை கைது செய்தனர். பின்னர் அவர் ஆலப்புழா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.