< Back
தேசிய செய்திகள்
இஸ்ரேல் - ஹமாஸ் போரை சர்வதேச நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

இஸ்ரேல் - ஹமாஸ் போரை சர்வதேச நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
5 Nov 2023 10:16 AM GMT

மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.

புதுடெல்லி,

பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப் படுகொலையை உடனடியாக தடுக்க சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவது என்பது குறைந்தபட்ச தார்மீக நடவடிக்கை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பாலஸ்தீனத்தில் நடந்துவரும் தாக்குதல் மிகக் கொடூரமானது. கிட்டத்தட்ட 5 ஆயிரம் குழந்தைகள் உட்பட 10,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூறு குடும்பங்கள் அகதிகளாகிவிட்டன.

மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. அகதி முகாம்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சுதந்திர உலகின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இந்த இனப்படுகொலைக்கு நிதி வழங்கி, ஆதரவளித்து வருவது வெட்கக்கேடானது.

குறைந்தபட்ச நடவடிக்கையாக சர்வதேச சமூகம் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும். தற்போது இதனைச்செய்யாவிட்டால் எவ்வித தார்மிக அறமும் இல்லாமலாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்