< Back
தேசிய செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம் பெண் ஆணவக்கொலை - குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம் பெண் ஆணவக்கொலை - குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
27 Jun 2023 3:42 PM IST

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை உறவுக்கார இளைஞன் கொலை செய்துள்ளான்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் லிம்பயத் பகுதியை சேர்ந்த கல்யாணி (20) என்ற இளம்பெண் ஜிதேந்திர சொனாவானி (24) என்பவரும் கடந்த மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த திருமணத்திற்கு கல்யாணியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே எதிர்ப்பை மீறி கோர்ட்டில் ஜிதேந்திராவை கல்யாணி பதிவுத்திருமணம் செய்துகொண்டார்.

பதிவுத்திருமணம் செய்துகொண்ட நிலையில் மணமகன் ஜிதேந்திராவின் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், லிம்பயத் பகுதியில் உள்ள ஜிதேந்திராவின் வீட்டிற்கு நேற்று மாலை கல்யாணியின் உறவுக்கார இளைஞரான ஹிமந்த் சொனாவானி (வயது 24) சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த கல்யாணி மீது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹிமந்த் சரமாரியாக குத்தினார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் அதிர்ச்சியடைந்த கல்யாணி அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடும்பத்தின் எதிர்ப்பை மீது திருமணம் செய்த கல்யாணியை உறவுக்கார இளைஞன் ஆணவக்கொலை செய்த நிலையில் கொலையாளி ஹிமந்த் சொனாவானியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்