< Back
தேசிய செய்திகள்
ஹனிடிராப் முறையில் தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி தங்கச்சங்கிலி பறிப்பு
தேசிய செய்திகள்

'ஹனிடிராப்' முறையில் தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி தங்கச்சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
29 March 2023 12:15 AM IST

‘ஹனிடிராப்’ முறையில் தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி ஐபோன் மற்றும் தங்கச்சங்கிலியை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பன்னரகட்டா:

'ஹனிடிராப்' முறையில் தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி ஐபோன் மற்றும் தங்கச்சங்கிலியை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐபோன் பறிப்பு

பெங்களூரு புறநகர் பன்னரகட்டா சாலையை சேர்ந்தவர் சஷாங்க். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பழகி வந்தனர். இதையடுத்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு எடுத்தனர். அப்போது இளம்பெண், பன்னரகட்டா அருகே ஹக்கிபிக்கி பகுதிக்கு வருமாறு சஷாங்கிடம் கூறினார்.

அவரும் சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து இருவரும் தனிமையில் இருந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு மர்மநபர்கள் சிலர் வந்தனர். அவர்கள், இளம்பெண்ணுடன் இங்கு என்ன வேலை என்று சஷாங்கை மிரட்டி அவரிடம் இருந்து பணம், தங்கச்சங்கிலி மற்றும் ஐபோன் உள்ளிட்டவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

அப்போது அவர்கள் இளம்பெண்ணையும் உடன் அழைத்து சென்றனர். இதையடுத்து சஷாங்க் உடனடியாக பன்னரகட்டா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

விசாரணையின்பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ருதிக் என்ற விஷ்ணு, ஆசிப், யாசின் பாஷா, சமீர் மற்றும் சாதிக் அலி ஆகியோர் என்பதும், அவர்கள் இளம்பெண்ணை பயன்படுத்த ஹனிடிராப் முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம், நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்