< Back
தேசிய செய்திகள்
கடும் குளிர் எதிரொலி; பஞ்சாப்பில் வரும் 14-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தேசிய செய்திகள்

கடும் குளிர் எதிரொலி; பஞ்சாப்பில் வரும் 14-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தினத்தந்தி
|
7 Jan 2024 9:16 PM IST

முன்னதாக டெல்லியில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகளில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. நடுங்க வைக்கும் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் சாலைகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் வரும் 14-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து மாநிலத்தின் முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் டெல்லியில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்