< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஹோலி பண்டிகை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
|7 March 2023 10:26 PM IST
ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனது இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கும் போல் இயங்கும். நாளை மறுநாள் (09-03-2023) முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.