< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வடகிழக்கு பகுதிக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் - அமித்ஷா பெருமிதம்
|2 March 2023 11:34 PM IST
3 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா பெற்ற வெற்றிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பகுதிக்கு இது வரலாற்றுசிறப்புமிக்க நாள். பா.ஜனதா மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்ததற்காக திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜனதா முன்னெடுத்த வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி.
வளர்ச்சி மற்றும் வளமைக்காக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாதான், மக்களின் முதல் விருப்பம் என்பது நிரூபணமாகி விட்டது.
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன். மேகாலயா மக்களுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.