சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்
|புல்வாமா மற்றும் ஷோபியான் பகுதியில் திரையரங்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
புல்வாமா,
ஜம்மு காஷ்மீரில் முப்பது வருடங்களுக்கு பிறகு சினிமா பார்க்கத் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா அங்குள்ள புல்வாமா மற்றும் ஷோபியான் பகுதியில் திரையரங்குகளை இன்று திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் 1990களில் இருந்த சாதகமற்ற நிலை காரணமாக அங்கு திரையரங்குகள் மூடப்பட்டது. சுமார் 33 ஆண்டுகளாக அந்த பகுதியில் திரையரங்குகள் கிடையாது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டபிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இந்த நிலையில் புல்வாமா மற்றும் ஷோபியான் பகுதியில் திரையரங்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. திரையரங்கங்களைத் திறந்து வைத்த துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீருக்கு இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறியுள்ளார்.