< Back
தேசிய செய்திகள்
ஜி-20 மாநாட்டின் வெற்றி - பிரதமர் மோடிக்கு சபாநாயகர் பாராட்டு
தேசிய செய்திகள்

ஜி-20 மாநாட்டின் வெற்றி - பிரதமர் மோடிக்கு சபாநாயகர் பாராட்டு

தினத்தந்தி
|
19 Sept 2023 4:47 AM IST

ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையே காரணம் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்தில் சபாநாயகர் ஓம்பிர்லா பேசினார். அவர் பேசியதாவது:-

ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. அதற்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையே காரணம். அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலால், சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்து டெல்லி பிரகடனத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டது.

ஜி-20 மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் புரட்சிகரமானவை. இனிவரும் ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்